டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாடாளுமன்றம்: இரு அவைகளின் ஊழியர்கள், பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் நாடாளுமன்றத்துக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

News image
நாடாளுமன்றம்
Updated On :1 பிப்ரவரி 2026, 5:47 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய பட்ஜெட்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் செயல்பாட்டுக்கும் ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தலைவர், துணைத் தலைவர் என இருவரின் சம்பளம் மற்றும் படிகளுக்கு ரூ. 1.56 கோடியும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகளுக்கு ரூ. 416.45 கோடியும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மக்களவையின் தலைமைச் செயலகத்தின் செலவுகள், ஊழியர்கள், அதிகாரிகளின் சம்பளம், பராமரிப்புச் செலவுகள், சன்சத் தொலைக்காட்சி செலவுகள் என ரூ. 586.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மக்களவைக்கு மட்டும் ரூ. 1,009 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக, மாநிலங்களவைத் தலைவர், அதன் துணைத் தலைவரின் சம்பளம் மற்றும் படிகளுக்கு ரூ. 2.55 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரின் சம்பளம், படிகள், அவரின் அலுவலகத்துக்கு என ரூ. 3.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைச் செயலகம், சம்பளம், அலுவலகம், பராமரிப்புச் செலவுகள் என தலைமைச் செயலகத்துக்கு 349.37 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவைத் தலைவரின் செயலகத்தில் ஊழியர்கள், அதிகாரிகள், நிர்வாகச் செலவுகள், பயண செலவுகள் என ரூ. 11.70 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களவைக்கு மொத்தமாக ரூ. 482.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.