டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி! 6.2% அதிகரிப்பு!

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.93 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 2025, ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.82 லட்சம் கோடி) இது 6.2 சதவீதம் அதிகமாகும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.93 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 2025, ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.82 லட்சம் கோடி) இது 6.2 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளில், ‘கடந்த ஜனவரியில் ரூ.1.93 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலம் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகி 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு இறக்குமதி மூலம் ரூ.52,253 கோடி வருவாய் கிடைக்கப் பெற்று 10.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

ஜனவரியில் நிகர ஜிஎஸ்டி வருவாய் 7.6 சதவீதம் அதிகரித்து ரூ.1.71 லட்சம் கோடியாக உள்ளது. திருப்பியளிக்கப்பட்ட தொகை 3.1 சதவீதம் குறைந்து ரூ.22,665 கோடியாக பதிவானது.

கடந்த ஆண்டு ஜனவரியில் செஸ் வரி வருவாய் ரூ.13,009 கோடியாக இருந்த நிலையில், நிகழாண்டு ஜனவரியில் ரூ.5,786 கோடியாக சரிந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.