திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

தில்லி ஐஐடி வளாக கட்டடத்திலிருந்து குதித்து மாணவர் தற்கொலை

தில்லி ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பற்றி.....

IIT Delhi student dies by suicide on campus

கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:18 pm IST

தில்லி ஐஐடி வளாகத்தில் உள்ள கட்டடத்திலிருந்து கீழே குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்டவர் 31 வயதான எம்.எஸ்சி இயற்பியல் மாணவர் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, மாணவர் காலை 8 மணியளவில் ஐஐடி தில்லி வளாகத்தின் முதன்மை வாயில் வழியாக உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் விரிவுரை மண்டப வளாகத்திற்குச் சென்று லிஃப்ட் மூலமாக ஆறாவது மாடிக்குச் சென்றுள்ளார்.

அங்கிருந்து கட்டடத்தின் முன்பகுதியில் இருந்து அவர் கீழே குதித்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உடனடியாக அவர் வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என்று கூறிய போலீஸ் அதிகாரி, மாணவரின் பாக்கெட்டில் இருந்த மொஃபல் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்படும் என்றார். முதற்கட்ட ஆய்வில், உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களைத் தவிர வேறு எந்தக் காயங்களும் உடம்பில் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக மாணவரின் ஆலோசனைக் பதிவுகள் மற்றும் பிற தகவல்களை ஐஐடி நிர்வாகத்திடமிருந்து போலீஸார் சேகரித்து வருகின்றனர். மாணவர் இறப்பிற்கான சூழ்நிலைகள் குறித்தும் கிடைக்கப்பெற்ற தகவல்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Summary

A 31-year-old M Sc Physics student at IIT Delhi died after allegedly jumping from a building on the campus on Saturday morning, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.