ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிகாரில் தேஜஸ்வி யாதவ் கைது! ஆதரவாகப் பேசிய பிரசாந்த் கிஷோர்!

பிகாரில் தேஜஸ்வி யாதவ் கைது செய்யப்பட்டது குறித்து பிரசாந்த் கிஷோர் பேசியது பற்றி...

Prashant Kishor

பிரசாந்த் கிஷோர் - ANI

Published On :19 ஆகஸ்ட் 2026, 9:59 pm IST

பிகாரில் தேஜஸ்வி யாதவ் கைது செய்யப்பட்டது குறித்து ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள மக்கள் மாளிகை (லோக் பவன்) நோக்கி, மாணவர்கள் தொடர்பான பிரச்னைகள், வேலையின்மை, தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியவற்றுக்கு எதிராக இன்று (ஆக. 19) பேரணி நடத்தப்பட்டது.

இந்தப் பேரணியில் பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், அக்கட்சியின் எம்.பி. மிசா பாரதி மற்றும் பல தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது, ​​தேஜஸ்வி யாதவ் மற்றும் பிற போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

அவர் (தேஜஸ்வி யாதவ்) பிகார் சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர், அவர் அதைச் செய்ய வேண்டும். அதுதான் அவருடைய வேலை. சில சமயங்களில் அவர் அதைச் செய்கிறார்.

ஆனால் இன்னும் அடிக்கடி அதைச் செய்ய வேண்டும். பிகார் முழுவதும், சாதி, மதம் குறித்து பேசுவதற்கு பதிலாக, இப்போது வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி மக்கள் பேசுகிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம். இதைவிடச் சிறந்த செய்தி வேறு என்ன இருக்க முடியும்? என்று தெரிவித்தார்.

Summary

Jan Suraaj party leader Prashant Kishor has commented on the arrest of Tejashwi Yadav in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.