ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகில் 3.4 கோடி மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை! இந்தியாவின் நிலை என்ன?

உலகளவில் 3.4 கோடி சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்...

health workers

மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை... - கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 10:17 pm IST

உலகளவில், 3.4 கோடி மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் நிதிச் சுமையின்றி மக்கள் சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கு 3.4 கோடி அளவிலான மருத்துவர்கள், செவிலியர்கள், பல் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுவதாக, தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்தியாவின் மக்கள்தொகையின் அடிப்படையில், 10,000 இந்தியர்களுக்கு வெறும் 73 மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 10,000 பேருக்கு வெறும் 10.5 மருத்துவர்கள் மற்றும் 10.8 செவிலியர்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தெற்காசிய நாடுகளில் அதிக மருத்துவப் பணியாளர்களின் தேவையுள்ளதாகவும், கூடுதலாக 26 லட்சம் மருத்துவர்கள் மற்றும் 1 கோடி செவிலியர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், 1990 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், உலகளவில் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து மும்மடங்கு அதிகரித்து 12 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில், பெண்கள் சுமார் 71.4 சதவிகிதம் பங்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that there is a global shortage of 34 million healthcare workers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.