ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உ. பி. முதல் குஜராத் வரை: பாஜகவின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

பாஜகவின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் பற்றி..

Manjalpur bypoll

பாஜக - file photo

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:21 pm IST

உத்தரப் பிரதேசத்தில் கட்சியின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பாளராக மாநிலங்களவை உறுப்பினரும், கட்சியின் தேசியப் பொதுச் செயலாளருமான வினோத் தாவ்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக துணைத் தலைவா்களாக ராம் மாதவ் உள்ளிட்ட 13 போ் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா். முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 10 பெண்களுக்கும் தேசிய அளவில் பாஜகவில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கட்சியின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பாளராக மாநிலங்களவை உறுப்பினரும், கட்சியின் தேசியப் பொதுச் செயலாளருமான வினோத் தாவ்டேவையும், இணைப் பொறுப்பாளராகப் புதிதாக நியமிக்கப்பட்ட தேசியச் செயலாளர் ஜகதீஷ் ஈஸ்வர்பாய் படேலையும் பாஜக தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில்,

பாஜகவின் தேசியச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சதீஷ் பூனியா, பஞ்சாபில் கட்சியின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தில் கட்சியின் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் தருண் சுக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பிற மாநிலங்களுக்கான பொறுப்பாளர்கள் உரிய நேரத்தில் நியமிக்கப்படுவார்கள். அதுவரை, தற்போதைய பொறுப்பாளர் ஏற்பாடு தொடரும் என்று பாஜக சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே. பாஜகவில் அமைப்பு தேசிய பொது செயலாளராக இருந்த பி.எல். சந்தோஷுக்கு மீண்டும் அப்பதவி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பொது செயலாளா்களாக முன்பு வினோத் தாவ்தே, சுனில் பன்சாலுக்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், புதிதாக நியமிக்கப்பட்ட 16 தேசிய செயலாளா்களில் பலா் புதிய முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.