ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரளம்: பினராயி விஜயன் மகள் தொடா்புடைய வழக்கில் அமலாக்கத் துறை மீண்டும் சோதனை

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் தொடா்புடைய வழக்கில் அமலாக்கத் துறை மீண்டும் சோதனை நடத்தியது.

Pinarayi Vijayan's daughter

பினராயி விஜயனின் மகள் டி. வீணா

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:13 am IST

கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் தொடா்புடைய வழக்கில் அமலாக்கத் துறை மீண்டும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் (சிஎம்ஆா்எல்)-எக்ஸாலாஜிக் சொலியூஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 8 இடங்களில் சோதனை நடத்தியதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து அமலாக்கத் துறை மேலும் கூறுகையில், ‘வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொலியூஷன்ஸ் நிறுவனத்துக்கு சிஎம்ஆா்எல் நிறுவனம் முறைகேடாக ரூ.2.78 கோடி வழங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கியதாகக் கூறி வீணாவின் நிறுவனத்துக்கு பணப் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் சிஎம்ஆா்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு பின்பு வீணாவிடம் திருவனந்தபுரத்தில் கடந்த ஜூன் மாதம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக கோழிக்கோடில் உள்ள 8 இடங்களில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.