ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வந்தே மாதரம் விவகாரம்: பாஜக-ஆர்எஸ்எஸ்ஐ சாடிய கெலாட்!

வரலாற்றை மாற்ற முடியாது அசோக் கெலாட் விமர்சனம் பற்றி..

Ashok Gehlot

அசோக் கெலாட்

Published On :17 ஆகஸ்ட் 2026, 5:31 pm IST

வந்தே மாதரம் பாடலை தங்கள் சித்தாந்தத்துடன் இணைக்க பாஜக–ஆர்எஸ்எஸ் முயற்சி செய்வதாகவும், வரலாற்றை மாற்ற முடியாது எனவும் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

புது தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் கெலாட்டின் இந்தக்கருத்துகள் வெளியாகியுள்ளன.

ஆனால், காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சித்தோர்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தப் பிரச்னையை எழுப்பி, காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களை விமர்சித்திருந்தார்.

அமித் ஷாவின் கருத்துகளைக் குறிப்பிட்ட கெலாட், அமித் ஷா நேற்று சித்தோர்கரில் 'வந்தே மாதரம்' பற்றிப் பேசினார். வரலாறு தெரிந்தவர்களுக்கு அது வேடிக்கையாகத் தோன்றியிருக்கும்.

வந்தே மாதரம் பாடலுக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ்-க்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஆர்எஸ்எஸ் அதன் சித்தாந்தத்திற்கும் 'வந்தே மாதரம்' பாடலுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

ஆட்சிக்கு வந்த பிறகு, தங்கள் மீதான கறையைப் போக்க வரலாற்றை மாற்றியமைக்க பாஜகவும்-ஆர்எஸ்எஸ்வும் விரும்புகிறார்கள். ஆனால் வெறும் பேச்சுகளால் வரலாற்றை மாற்றிவிட முடியாது. நாட்டு மக்கள் அனைத்தையும் அறிவார்கள் என்று அவர் கூறினார்.

Former Rajasthan chief minister Ashok Gehlot on Monday questioned the RSS and BJP's association with Vande Mataram and said it is "amusing" to hear the views of the saffron organisation that "never had any connection" with the national song.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.