ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிரதமரின் கதி சக்தி திட்டம்: ரூ. 18.66 லட்சம் கோடியில் 396 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை!

பிரதமரின் கதி சக்தி திட்டத்தின்கீழ் ரூ.18.66 லட்சம் கோடி மதிப்பிலான 396 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:05 am IST

பிரதமரின் கதி சக்தி திட்டத்தின்கீழ் (உத்வேகத் திட்டம்) ரூ.18.66 லட்சம் கோடி மதிப்பிலான 396 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2021, அக்டோபா் 13-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட வலையமைப்பு திட்டக் குழு (என்பிஜி) சாலை மற்றும் ரயில்வே என பல்வேறு துறைகளுக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களை அமைச்சகங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் தரவுகளில் கூறப்பட்டிருப்பதாவது: ரூ.18.66 லட்சம் கோடி மதிப்பில் 396 உள்கட்டமைப்புத் திட்டங்களை என்பிஜி மதிப்பீடு செய்தது. இதில் 256 திட்டங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்டன. அவற்றுள் 198 திட்டங்கள் அமலாக்க நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

தளவாடங்கள் செலவை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தில் ரூ.500 கோடிக்கு மேலான முதலீடுகளை என்பிஜி மூலமே மேற்கொள்ள முடியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.