ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹிமாசலில் நாளை(ஆக.17) அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை!

ஹிமாசலில் நாளை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி....

Aug 17 declared holiday in Himachal govt schools

மாணவர்கள். - கோப்புப்படம்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:32 pm IST

ஹிமாசலில் நாளை(ஆக.17) அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் இயங்கும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் ஜூலை 29ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சனிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பில், பள்ளி, உட்பிரிவு, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றதைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 17ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வெள்ளிக்கிழமை அளித்த அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுதந்திர நாளைக் கொண்டாடிய தனியார் பள்ளிகள், ஆகஸ்ட் 17ஆம் தேதி விடுமுறை அளிப்பதா வேண்டாமா என்பதைத் தாங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

It will be a holiday on Monday in all government schools in Himachal Pradesh as students and teachers were required to attend school on Independence Day celebrations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.