ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுதந்திர நாள் விழா கோலாகலம்: தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

தில்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தியது தொடர்பாக...

PM Narendra Modi hoists the national tri-colour flag during the 8oth Independence Day celebrations, at Red Fort in New Delhi.

புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர நாள் கொண்டாட்டங்களின்போது, ​​பிரதமர் நரேந்திர மோடி தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார். - பிடிஐ

Published On :15 ஆகஸ்ட் 2026, 9:31 am IST

புதுதில்லி: சுதந்திர நாளையொட்டி, தில்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் நாட்டின் 80 ஆவது சுதந்திர நாள் விழா கோலாகலமாக சனிக்கிழமை(ஆக 15) கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் தில்லி செங்கோட்டையில் சுதந்திர நாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சுதந்திர நாள் விழாவையொட்டி, தில்லி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்புடன், செய்யறிவு தொழில்நுட்ப வீடியோ பகுப்பாய்வு வசதி கொண்ட ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தில்லி செங்கோட்டை வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மோடியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர், முப்படை மற்றும் தில்லி காவல்துறை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில், தில்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு சுதந்திர நாள் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 13 ஆவது முறையாக செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். தேசிய கொடி ஏற்றப்பட்டதும் தேசிய கீதம இசைக்கப்பட்டது. இந்திய விமான படை சார்பில் தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. முப்படை ராணுவ வீரர்களும் அணிவகுத்து சென்றனர்.

பிரதமர் மோடி தனது சுதந்திர நாள் உரையில், நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து பேசி வருகிறார். நாட்டின் கனவுகளும் லட்சியங்களும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அந்த கனவுகளை நனவாக்குவதற்கான உறுதியுடனும் வலுவாகவும் இருக்க வேண்டும். வலுமான மன உறுதியே, சாவல்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியில் நாட்டிற்கான வழியைக் கண்டறியும் திறனை வழங்குகிறது. 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் வலுவான உறுதியுடன், புதிய உயரங்களை எட்ட வேண்டும். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு வளர்ந்த நாடாக வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக, தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர நாள் விழாவில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Prime Minister Narendra Modi hoisted the national tri-colour flag during the 8oth Independence Day celebrations, at Red Fort in New Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.