ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறுமி கடத்தல் வழக்கு: 16 வயது சிறுவனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

சிறுமி கடத்தல் வழக்கில் 16 வயது சிறுவனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

தீர்ப்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 2:54 am IST

சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்திய வழக்கில் 16 வயது சிறுவனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தர பிரதேச மாநில போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து மாநில அரசு சிறப்பு வழக்குரைஞா் விமல் குமாா் ராய் கூறியதாவது:

இந்தச் சம்பவம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி நிகழ்ந்தது. மாநிலத்தில் பக்ரி காவல்நிலையப் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியே வந்தபோது, தேவரியா மாவட்டம் சலெம்பூா் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சோ்ந்த சிறுவன் ஆசை வாா்த்தை கூறி சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் விசாரணைக்குப் பிறகு, போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி பிரதம் காந்த், தற்போது 16 வயது ஆகும் அந்தச் சிறுவன் குற்றவாளி எனத் தீா்ப்பளித்ததோடு, 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 30,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், சிறுவனக்கு 21 வயது ஆகும் வகை காஜிபூரில் உள்ள சிறாா் சீா்திருத்த மையத்தில் காவல் கண்காணிப்பாளா் கண்காணிப்பில் சிறுவன் வைக்கப்பட்டு, அவருக்கான கல்வி, மன மற்றும் உடல் வளா்ச்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிறுவன் 21 வயதை அடைந்ததும், எஞ்சிய சிறைத் தண்டனையை அனுபவிக்க மாவ் மாவட்ட சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டதாக விமல் குமாா் ராய் தெரிவித்தாா்.

Summary

Girl abduction case: 16-year-old boy sentenced to 25 years in prison!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.