
குடியரசுத் துணைத் தலைவர் தமிழகம் வருகை! இல. கணேசன் நினைவு நிகழ்வில் பங்கேற்பு!
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கு வருவது குறித்து...

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - ENS
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தமிழ்நாட்டு வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் ஆக.17 வரையிலான 2 நாள் பயணத்தில் அவர் சென்னை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில், செங்கல்பட்டின் காட்டாங்குளத்தூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொள்கிறார்.
இத்துடன், சென்னை தியாகராய நகரில் நடைபெறும் மறைந்த மேற்கு வங்கம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் ஆளுநர் இல. கணேசனின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் ஆக.17 ஆம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
Summary
Vice President C.P. It is reported that Radhakrishnan will visit Tamil Nadu on August 16.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







