ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அஸ்ஸாம் வெள்ளம்: பலி 104 ஆக உயர்வு, 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

அஸ்ஸாம் வெள்ள பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 104ஆக உயர்ந்திருப்பது பற்றி....

Assam flood toll rises to 104 with one more death; over 78,000 people affected

அஸ்ஸாம்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 9:33 pm IST

அஸ்ஸாமில் வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் ஒருவர் பலியானார். இதையடுத்து இந்த ஆண்டின் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. அஸ்ஸாமில் இடைவிடாத பலத்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

ஏழு மாவட்டங்களில் சுமார் 78,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், கோலாகாட் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 31 நிவாரண முகாம்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் வீடுகளை இழந்த 5,000-க்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுதவிர 37 நிவாரண விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மொத்தமாக 8,268.71 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் 42,105 விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The death toll in Assam's floods rose to 104 on Friday with one more fatality, while the number of people affected by the deluge also increased marginally to over 78,000, according to an official bulletin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.