ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பச்சை குத்தி போராட்டம்! சீனாவுக்கு எதிராக களமிறங்கிய திபெத் இளைஞர்கள்!

தர்மசாலாவில் சீனாவுக்கு எதிராக திபெத் இளைஞர்கள் பச்சை குத்தி போராட்டம் நடத்தியது குறித்து...

tibetians tattoo protest

சீனாவுக்கு எதிராகப் பச்சைக் குத்தி போராட்டம் நடத்தும் திபெத் மக்கள்...

Published On :13 ஆகஸ்ட் 2026, 7:27 pm IST

ஹிமாச்சலப் பிரதேசத்தில், சீனாவின் கொள்கைகளுக்கு எதிராக திபெத்திய மக்கள் பச்சை குத்திக் கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

திபெத்திய பகுதியை ஆக்கிரமித்து தனது தன்னாட்சிப் பகுதியாக சீனா கட்டுப்படுத்தி வருகின்றது. இதனால், ஏராளமான திபெத்திய மக்கள் ஹிமாசலப் பிரதேசத்தின் தர்மசாலா, சிம்லா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளில் குடியேறி வசித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சீனாவின் இன ஒற்றுமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்திய ஆர்வலர் லோப்கா ரங்சென் கடந்த ஜூலை 2 ஆம் தேதி ஜக்கிய நாடுகள் அவையின் தலைமைச் செயலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த நிலையில், லோப்கா ரங்செனின் தற்கொலைக்குக் கண்டனம் தெரிவித்து சீனாவுக்கு எதிராக தர்மசாலாவில் திபெத்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் கடந்த 26 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில், ரங்சென் மறைந்து இன்றுடன் (ஆக. 13) 42 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சீனாவின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திபெத்திய இளைஞர்கள் தங்கள் உடலில் பச்சைக்குத்திக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள், ரங்செனின் தியாகம், திபெத்தின் சுதந்திரப் போராட்டம், கலாசார அடையாளம், ஒற்றுமை மற்றும் சீனாவின் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பு ஆகியவற்றை குறிப்பிடும் செய்திகள் மற்றும் குறியீடுகள் உள்ளிட்டவற்றை தங்களின் உடலில் பச்சைகளாகக் குத்திக்கொண்டனர்.

இதுபற்றி, போராட்டக்காரர்கள் கூறுகையில்,

“திபெத்தின் சுதந்திரத்திற்காக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் ரங்செனின் தியாகத்தை உலக வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது என்பதை உணர்த்துவதற்காக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

இதன்மூலம், ரங்செனின் தியாகத்துக்கு மரியாதை செலுத்துவதுடன், திபெத்தின் நலனுக்காக ஐ.நா. அமைப்பு குரல் கொடுக்க வேண்டுமெனவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Summary

In Himachal Pradesh, Tibetan people have staged a protest featuring tattoos to oppose China's policies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.