ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!

கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது பற்றி...

Karnataka bandh

கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ் - Dinamani

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:47 pm IST

கர்நாடகத்தில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் இன்று (ஆக. 13) முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

இதனால், கர்நாடகம் முழுவதும் பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் சேவையும் ரத்து செய்யப்பட்டன.

அனைத்து கடைகளையும் அடைக்க கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கன்னட அமைப்புகள் தங்களின் போராட்டத்தை திரும்பப் பெற்றதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். அனைத்து கன்னட அமைப்புகளின் தலைவர்களும் தன்னை சந்தித்து, போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளதாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகத்தின் நலன் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். அதனை பரிசீலித்து முடிவெடுப்பேன் என்று முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வாட்டாள் நாகராஜை அவரது வீட்டில் முன்னெச்சரிக்கையாக பெங்களூரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், போராட்டம் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து ஒசூரிலிருந்து பெங்களூரு, ஈராட்டிலிருந்து மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Karnataka statewide bandh called off!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.