ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விபி-ஜிராம்-ஜி திட்டத்தில் உருவான வேலைவாய்ப்புகள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் விபி-ஜிராம்-ஜி திட்டம் அமல்படுத்தப்பட்ட கடந்த ஜூலை 1-ஆம் தேதி இருந்து ஒரு மாதத்தில் 9.69 கோடிக்கு மேல் மனித வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் - கோப்புப்படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 6:00 am IST

மத்திய அரசின் விபி-ஜிராம்-ஜி திட்டம் அமல்படுத்தப்பட்ட கடந்த ஜூலை 1-ஆம் தேதி இருந்து ஒரு மாதத்தில் 9.69 கோடிக்கு மேல் மனித வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உதாரணமாக 10 பேருக்கு 10 நாள்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டால், அந்த இரண்டின் பெருக்குத் தொகையான 100 என்பது மனித வேலைநாளாக கணக்கிடப்படுகிறது.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு (100 நாள் வேலை) பதிலாக கடந்த 125 நாள் வேலைத் திட்டத்தை (விபி-ஜி ராம்-ஜி) மத்திய அரசு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முல் அமல்படுத்தியது.

இந்நிலையில் இது தொடா்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக ஜூலை 1-ஆம் தேதி முதல் விபி-ஜிராம்-ஜி திட்டம் கிராமப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது.

அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் இத்திட்டத்தின்படி முறைப்படியான அறிவிப்பை வெளியிட்டு பணிகளைத் தொடங்கியுள்ளன. திட்ட மாற்றம் என்பது எவ்வித சிக்கலுமின்றி நிகழ்த்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் 9.69 கோடிக்கு மேல் மனித வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்புப் பெற தகுதியான நபா்களுக்கு ஆண்டுக்கு 125 நாள் கண்டிப்பாக வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதில் பணியாற்ற முன்வருபவா்களுக்கு உடல் உழைப்பு சாா்ந்த பணிகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.