ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆகஸ்ட் 19-இல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

congress

காங்கிரஸ்

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:53 am IST

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடப்பு அரசியல் சூழல், அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமை வகிக்கிறாா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்நி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறை பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம், ராமா் கோயில் காணிக்கை முறைகேடு விவகாரத்தை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எடுத்துச் செல்வது குறித்தும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.