ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! கொந்தளித்த மாணவர்கள்

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி நடத்துவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளது குறித்து...

Students in the protest arena.

போராட்டக்களத்தில் மாணவர்கள். - படம் - பிடிஐ

Published On :10 ஆகஸ்ட் 2026, 7:59 pm IST

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதாக மாணவர் தலைவர் மாணவர் தலைவர் ரவீந்திர பஸ்வான் குற்றம் சாட்டுகின்றார்.

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, மாணவர்கள் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கிப் பேரணி சென்ற வழியில் தடுப்புகள் அமைத்து மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் தடுப்புகளை மாணவர்கள் தகர்க்க முயன்றதால், காவல்துறை - மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எனவே, மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் வன்முறையை பயன்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ரவீந்திர பஸ்வான் பேசியதாவது:

சட்டப்பேரவை முற்றுகையின் ஒரு பகுதியாக நாங்கள் போராட்டத்தையும் நடத்தி வருகிறோம். நாங்கள் அமைதியாக இங்கு வந்து அமர்ந்தோம். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்குள்ளோம்.

லட்சக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கும்போது, ​​அவர்களுக்குச் செவிசாய்த்து, அவர்களின் கோரிக்கைகளைக் கவனமாகக் கேட்பது அரசின் பொறுப்பு அல்லவா? ஆனால் அரசு என்ன செய்கிறது?

இருள் சூழ்ந்ததும் இந்தப் பகுதி ஒரு காவல் முகாமாக மாற்றப்பட்டு, எங்களுக்கு எதிராகத் தடியடி நடத்தப்படுகிறது. எங்களைப் பிரிக்க காவல்துறையினர் எங்களுடைய நண்பர்கள் மீது தடியடி நடத்துகின்றனர். ஜார்க்கண்ட் மக்கள் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த மாணவர் இயக்கம் தற்போது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்பதை இன்று நாங்கள் அறிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Student leader Ravindra Paswan alleges that the police are resorting to a lathi-charge against students protesting in Jharkhand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.