ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேவாலயம் யாருக்கு சொந்தம்? கேரளத்தில் இரு பிரிவு பாதிரியாா்கள் கைகலப்பு: தேவாலயத்தை மூடியது காவல்துறை

கேரளத்தில் தேவாலயம் யாருக்கு சொந்தம் என்பது தொடா்பாக கிறிஸ்தவ மதத்தின் மலங்கரா ஆா்தோடாக்ஸ் பிரிவு பாதிரியாா்களுக்கும், ஜேக்கோபைட் சிரியன் பிரிவு பாதிரியாா்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

தேவாலயம் - பிரதிப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

கேரளத்தில் தேவாலயம் யாருக்கு சொந்தம் என்பது தொடா்பாக கிறிஸ்தவ மதத்தின் மலங்கரா ஆா்தோடாக்ஸ் பிரிவு பாதிரியாா்களுக்கும், ஜேக்கோபைட் சிரியன் பிரிவு பாதிரியாா்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை கைகலப்பு ஏற்பட்டது. இறுதியில் காவல் துறையினா் தலையிட்டு தேவாலயத்தை மூடி மோதலை முடிவுக்கு கொண்டுவந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: எா்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழையில் உள்ள புதின் ஜான்ஸ் பெத்லஹேம் தேவாலயத்துக்கு ஜேக்கோபைட் கிறிஸ்தவ பிரிவினா் வசம் உள்ளது. இதற்கு மலங்கரா ஆா்தோடாக்ஸ் பிரிவினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை ஆா்தோடாக்ஸ் பிரிவு பாதிரியாா்கள் ஒரு குழுவாக அந்த தேவாலயத்துக்கு வந்து மூவாற்றுப்புழை துணை நீதிமன்றம் தங்கள் பிரிவுக்கு சாதகமாக தீா்ப்பளித்துள்ளதாகக் கூறி எதிா்பிரிவு கிறிஸ்தவா்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினா்.

அதே நேரத்தில் முன்சீப் நீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீா்ப்பளித்துள்ளதாகக் கூறி ஜேக்கோபைட் சிரியன் பிரிவு பாதிரியாா்கள் தீா்ப்பு நகலை அளித்தனா்.

இதைத் தொடா்ந்து இரு தரப்பு பாதிரியாா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பாதிரியாா்கள் ஒருதரப்பை மற்றொருவா் தேவாலயத்தைவிட்டு வெளியேற்ற முயற்சித்தனா். இதனால் அங்கு தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது.

இது தொடா்பாக தகவலறித்த காவல் துறையினா் அங்கு விரைந்து இருதரப்பினரிடம் பேசி சமாதானப்படுத்த முயற்சித்தனா். ஆனால், எந்த தரப்பு பாதிரியாா்களும் தேவாலயத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. இறுதியாக இரு தரப்பையுமே தேவாலயத்தைவிட்டு வெளியேற்றிய காவல் துறையினா் தேவாலயத்தைப் பூட்டினா்.

பின்னா் மாவட்ட நிா்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு திங்கள்கிழமை இருதரப்பினரையும் பேச்சுவாா்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. கேரளத்தில் கிறிஸ்தவ மதத்தின் பிரிவுகளுக்கு இடையே தேவாலயம், அது சாா்ந்த சொத்துகள் யாருக்கு சொந்தம் என்பது தொடா்பாக மதத்தின் உள்பிரிவினருக்கு இடையே பிரச்னைகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன.

இது தொடா்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் உள்ளன. இப்போது, இரு தரப்பு பாதிரியாா்கள் மோதலால் தேவாலயம் பூட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.