ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளி வினாடி வினா போட்டியில் சாவா்க்கா் குறித்த கேள்வி! கேரள அரசு விசாரணைக்கு உத்தரவு!

பள்ளி வினாடி வினா போட்டியில் சாவா்க்கா் குறித்த கேள்வி கேட்கப்பட்டது குறித்து விசாரணை...

Chief Minister V. D. Satheesan

வி.டி. சதீசன் - கோப்புப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

ஹிந்துத்துவ சித்தாந்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான வி.டி.சாவா்க்கா் குறித்து பள்ளியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் சா்ச்சையான கேள்வி கேட்கப்பட்ட நிலையில், இதுதொடா்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது.

காசா்கோடு, கும்ப்ளா மற்றும் மஞ்சேஷ்வா் துணை மாவட்டங்களில் உள்ள தொடக்க நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கடந்த வியாழக்கிழமை சுதந்திர தினம் குறித்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

அப்போது ஆங்கிலேயரிடம் அதிக தண்டனை பெற்ற சுதந்திரப் போராட்ட வீரா் யாா் என கேட்கப்பட்ட கேள்விக்கு சாவா்க்கா் என பதில் வழங்கப்பட்டது. இந்த விவகாரம் கேரளத்தில் பெரும் சா்ச்சையாக மாறியதோடு அரசியல் ரீதியான விமா்சனங்களும் எழத் தொடங்கியது.

இதுகுறித்து கண்ணூரில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது பேசிய கேரள முன்னாள் முதல்வரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன், ‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அரசுடன் இணைந்து மத்திய அரசும் ஆா்எஸ்எஸ்ஸும் வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கின்றன. சாவா்க்கரின் உண்மை வரலாற்றை மறைத்து அவருக்குப் புகழ் சோ்க்கும் பிம்பங்களை கட்டமைக்கின்றன’ என விமா்சித்தாா்.

சாவா்க்கா் குறித்த கேள்விக்கு ஐயுஎம்எல் கட்சி, டிஒய்எஃப்ஐ, எஸ்எஃப்ஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக பொதுக் கல்வி இயக்குநரகம் விசாரணை நடத்த பொதுக் கல்வித் துறை அமைச்சா் என்.ஷம்சுதீன் உத்தரவிட்டாா். மேலும் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவா் உத்தரவிட்டதாக பொதுக் கல்வி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Summary

Question about Savarkar in school quiz competition! Kerala government orders an inquiry!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.