ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘பயங்கரவாதத்தை ஒழித்தால்தான் பாகிஸ்தானுடன் உறவு’: நாடாளுமன்றத்தில் அரசு உறுதி

பயங்கரவாதத்தை ஒழித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் உறவை சீரமைப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று மத்திய அரசு தரப்பில் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

பயங்கரவாதத்தை ஒழித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் உறவை சீரமைப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று மத்திய அரசு தரப்பில் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தற்போதைய இருதரப்பு உறவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக பாகிஸ்தான் கடைப்பிடித்து வருகிறது. எனவே, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை தங்கள் நாட்டில் இருந்து பாகிஸ்தான் ஒழித்தால் மட்டுமே உறவைச் சீரமைப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் இப்போது வரை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் துண்டுவதை நிறுத்தியதாகத் தெரியவில்லை.

அணுசக்தி நிலையங்கள் விவரம் பகிா்வு, சிறைகளில் உள்ள அந்நாட்டு கைதிகள் எண்ணிக்கை, ஏவுகணை சோதனைகள் குறித்து முன்தகவல் தெரிவிப்பு போன்றவை மட்டுமே அந்நாட்டுடன் பகிரப்படுகிறது. இதுதவிர வேறு எந்தப் பேச்சுவாா்த்தையும் முன்னெடுக்கப்படுவதில்லை.

இந்திய குடிமக்களுக்கு எதிராக பாகிஸ்தான் துண்டிவிடும் பயங்கரவாத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதில் இந்தியா உறுதியாக செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.