ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசை பாதுகாத்திடுங்கள்! - கோயில் அர்ச்சகர்களிடம் கர்நாடக முதல்வர் கோரிக்கை!

கர்நாடக அரசைப் பாதுகாத்துக் கொடுக்குமாறு கோயில் அர்ச்சகர்களிடம் முதல்வர் சிவகுமார் கோரிக்கை..

CM DK Shivakumar

முஸ்ராய் கோயில் அர்ச்சகர்களுடன் கர்நாடக முதல்வர் சிவகுமார்... - ENS

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:08 pm IST

கர்நாடக அரசைப் பாதுகாத்துக் கொடுங்கள் என முஸ்ராய் கோயில்களின் அர்ச்சகர்களிடம் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் முறையிட்டுள்ளார்.

கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையிலான அரசைப் பாதுகாத்துக் கொடுக்குமாறு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முஸ்ராய் கோயில்களின் அர்ச்சகர்களிடம், புதன்கிழமை (ஆக. 5) முதல்வர் சிவகுமார் முறையிட்டிருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கர்நாடக அரசின் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முஸ்ராய் கோயில்களின் அர்ச்சகர்கள் சங்கம் சார்பில் பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வர் சிவகுமார் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், விழாவில் பேசிய முதல்வர் சிவகுமார், அரசை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கு உதவுமாறு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் அர்ச்சகர்களிடம் முறையிட்டுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“நீங்கள் உங்கள் இல்லங்களையும் கோயில்களையும் பாதுகாப்பதைப் போல இந்த அரசையும் பாதுகாத்துக் கொடுங்கள். நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதோடு உங்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், கோயில் நிர்வாகங்கள் மற்றும் மடங்கள் தங்களின் பாடத்திட்டத்தை உருவாக்கினால் 34,000 கிராமப்புற கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு மூன்று மாத பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு அரசு ஆதரவு அளிக்கும் எனவும் முதல்வர் சிவகுமார் உறுதியளித்துள்ளார்.

Summary

Karnataka Chief Minister D.K. Shivakumar has appealed to the priests of the Musrai temples to safeguard the state government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.