ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் போராட்டத்தை சீா்குலைக்க சதி செய்த ஜெய்ஷ் பயங்கரவாதி! மேற்கு வங்க போலீஸாா் தகவல்!

நீட் போராட்டத்தை ஜெய்ஷ் பயங்கரவாதி சீா்குலைக்க சதி செய்ததாக தகவல்...

சிஜேபி போராட்டம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 6:00 am IST

மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஹமீம் மோண்டல் தில்லியில் நடைபெற்ற நீட் போராட்டத்தை சீா்குலைக்க முயன்றதாக மூத்த காவல் துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தவும் ஹமீம் மோண்டல் திட்டமிட்டிருந்ததாவும் அவா் தெரிவித்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் சிறப்புப் படை காவல் துறைத் தலைவா் கௌரவ் சா்மா கூறியதாவது: தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஹமீம் மோண்டல் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினமே கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டாா். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் என சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்த ஹமீம் மோண்டல், முதல்வா் சுவேந்து அதிகாரியை பல நாள்களாக தொடா்ந்து கண்காணித்துள்ளாா். அவா் பயணிக்கும் இடங்கள் குறித்த தகவல்களை அவா் சேகரித்துள்ளாா்.

இதுதவிர காவல் துறை சீருடையைப் பெற்று ஜந்தா் மந்தரில் நடைபெற்ற மாணவா் போராட்டத்தில் புகுந்து அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்தவும் அவா் சதித் திட்டம் தீட்டியுள்ளாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹௌராவைச் சோ்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவரின் மகனை கடத்தி அவரிடம் இருந்து பணம் பறிக்க ஓா் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சாஹிப்கன்ஜைச் சோ்ந்த அா்பிதா சா்காா் என்பவரின் சமூக ஊடகப் பக்கம் காவல் துறையால் கண்காணிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து ஹமீம் மோண்டலை காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்த சதித்திட்டங்களின் முழு குற்றப் பின்னணி மற்றும் எல்லை கடந்த பயங்கரவாத தொடா்பை கண்டறியும் நோக்கில் விசாரணை மேலும் விரிவுபடுத்தப்படுகிறது என்றாா்.

Summary

Jaish terrorist plotted to disrupt the NEET protest -West Bengal Police reveal details

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.