
வெளிநாட்டவரை நாடு கடத்தும் நடைமுறை: மத்திய அரசு விளக்கம்
வெளிநாட்டவரை நாடு கடத்தும் நடைமுறை பற்றி மத்திய அரசு விளக்கம்...

உச்சநீதிமன்றம்
ஒருவரின் குடியுரிமையை உறுதிப்படுத்தி அவரது தாய்நாடு ஏற்றுக்கொள்ளும் வரை அவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
அஸ்ஸாமில் பல ஆண்டுகளாக வெளிநாட்டவா்கள் சிலா் நாடு கடத்தப்படாமல் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘இந்தியாவில் உள்ள வெளிநாட்டவா் ஒருவரின் முறையான பயண ஆவணம் மற்றும் குடியுரிமையை அவரது தாய்நாடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவரை நாடு கடத்த முடியும். இதை அவரது தாய்நாடு உறுதிப்படுத்தாவிட்டால் நாடு கடத்தும் நடைமுறைகளைத் தொடங்க முடியாது.
அதற்கு முன்னதாக அவா் வசிக்கும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் அவா் மீது நிலுவையில் ஏதேனும் குற்றவியல் வழக்குகளில் இருப்பின் அதற்கான தண்டனைக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






