6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

பெங்களூரு மருத்துவமனை அருகே காய்கறி விற்பவர்கள் பலியான சம்பவம் குறித்து...

News image

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 8:29 am

பெங்களூரில் பௌரிங் மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மருத்துவமனை வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து கார்கே பேசியதாவது, "அது ஒரு பழைய வளாகம். அதுமட்டுமின்றி, அந்த வளாகத்தின் சுவர் சரியாகக் கட்டப்படவில்லை.

சில இடங்களில் மண் சுவரும், சில இடங்களில் செங்கற்களாலான சுவர் இருப்பதையும் கண்டேன். அந்த வளாகத்தைச் சரிசெய்ய வேண்டும் என நான் அங்கு பேசியிருக்கிறேன்.

வளாகத்துக்கு அருகில் அமர்ந்து காய்கறி விற்றவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இடிந்து விழுந்த மருத்துவமனை சுற்றுச் சுவர்

இடிந்து விழுந்த மருத்துவமனை சுற்றுச் சுவர் - PTI

வரும் காலங்களில் காய்கறி விற்பவர்கள், வளாகத்தைத் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. இன்று என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? இன்று பெங்களூரில் நடந்தது, நாளை வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஆகையால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, சிறு வணிகர்களுக்கு முடிந்தவரையில் உதவ வேண்டும்" என்று தெரிவித்தார்.

பெங்களூரில் புதன்கிழமைய்ல் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஓரிரு மணிநேரம் மட்டுமே நீடித்த பலத்த காற்று மற்றும் கனமழையால் பெங்களூரின் சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.

இந்த நிலையில், கனமழையின்போது சிவாஜிநகரில் பௌரிங் மருத்துவமனையின் 8 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், சுவரை ஒட்டிய நடைபாதையில் இருந்த வியாபாரிகள் உள்பட மக்கள் மீது சுவர் விழுந்தது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் சித்தராமையா ரூ. 5 லட்சமும், பிரதமர் மோடி ரூ. 2 லட்சமும் நிவாரண உதவி அறிவித்தனர்.

Summary

Bowring Hospital Wall Collapse in Bengaluru: The government should take precaution and help these gig workers or small traders, says Congress President Mallikarjun Kharge

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.