கொல்ம்பியா நாட்டைச் சேர்ந்த மறைந்த போதைப் பொருள் கடத்தல் தலைவர் பாப்லோ எஸ்கோபாருக்குச் சொந்தமான நீர்யானைகளைப் பாதுகாப்பதற்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
கொல்ம்பியா நாட்டில், 1990-கள் வரை போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை இயக்கி வந்தவர் பாப்லோ எஸ்கோபார். இவர், ஹசியெண்டா நாப்போலஸ் எனும் தனக்குச் சொந்தமான பண்ணையில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரிய வகை உயிரினங்களை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து பராமரித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 1993 ஆம் ஆண்டு பாப்லோ எஸ்கோபார் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர், அவருக்குச் சொந்தமான பண்ணைகள் பராமரிப்பின்றி கைவிடப்பட்டன. இதில், அந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நீர்யானைகள் கொல்ம்பியாவின் பிரதான நதியான மக்தலேனா பகுதியில் ஆயிரக்கணக்கில் பெருகியதாகக் கூறப்படுகிறது.
இதனால், மக்தலேனா நதியில் மீன்பிடிக்கும் மீனவர்களின் உயிருக்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 800 நீர்யானைகளைக் கொல்லும் கொலம்பியா அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகளை குஜராத்தில் உள்ள தனது வந்தாரா உயிரியல் பூங்காவில் வளர்த்து பராமரிக்க விரும்புவதாகக் கூறி கடந்த ஏப். 27 அன்று கொலம்பியா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இருப்பினும், ஆனந்த் அம்பானியின் விருப்பத்துக்கான கொலம்பியா அரசின் முடிவு குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆனந்த் அம்பானியின் வந்தாரா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள் உள்பட 2,000-க்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Anand Ambani has expressed his willingness to protect the hippos owned by Pablo Escobar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்டெய்னா் லாரி பின்னால் வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு; 7 போ் காயம்

ரிலையன்ஸ் குழுமத்துக்கு எதிரான வழக்கு: அனில் அம்பானியின் ரூ 3,034 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை

ஆனந்த் அம்பானி பிறந்த நாள்! 9 கேரள கோயில்களுக்கு ரூ. 22.5 கோடி நன்கொடை!

பிரபலங்கள் பங்கேற்ற நீடா அம்பானி கலாச்சார மையம் மூன்றாம் ஆண்டு விழா - புகைப்படங்கள்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை



