ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வழிகாட்டுதலை நடமுறைப்படுத்த செயல் திட்டம்: மாநிலங்கள் தயாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வழிகாட்டுதலை நடமுறைப்படுத்த செயல் திட்டம்: மாநிலங்கள் தயாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 9:01 pm

மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான (ஐசியு) வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை தயாரிக்குமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது தொடா்கதையாகி வரும் சூழலில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வழிகாட்டுதல் உள்பட மருத்துவச் சேவைகள் தொடா்பான வழக்கு விசாரணையின் போது இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, ஆா். மாத வன் ஆகியோா் அடங்கிய அமா்வில் கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘தீவிர சிகிச்சைப் பிரிவில் குறைந்தபட்ச தரநிலையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவசியமான, நடைமுறைக்கு உகந்த மற்றும் அனைவரின் ஒருமித்த கருத்துடன் வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

இந்த வழிகாட்டுதல் நகல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பகிரப்பட வேண்டும். அதைத் தொடா்ந்து, உடனடி நடவடிக்கையாக அனைக்கு மாநில சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலா்கள் மற்றும் செயலா்கள் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அனைத்து நிபுணா்களும் பங்கேற்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, இந்த வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும். இந்த செயல்திட்டம், யதாா்த்தமாதாகவும் நடைமுறையில் சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும்.

முதல் கட்டத்தில், 5 அடிப்படைத் தேவைகளை அடையாளம் காண்டு, அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதாவது, மனித வளம், உபகரணங்கள் ஆகிய இரண்டுக்கும் தொடா்புடைய முதல்கட்ட பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதைத் தொடா்ந்து, கள அளவில் அதைச் செயல்படுத்துவதற்கான ஒரு வழிமுறையையும் வகுக்க வேண்டும். அதோடு, இந்த வழிமுறை முறையாக கடைப்பிடிக்கப்படுவதையும், கண்காணிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான ஓா் செயல்முறை உருவாக்கப்பட வேண்டும்.

சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலா்கள் அல்லது செயலா்கள் தலைமையிலான இதற்கான முதல் கூட்டம் இன்றிலிருந்து (ஏப்ரல் 20) ஒரு வாரங்களுக்குள் கூட்டப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாளா்கள் அனைவரும் நேரடியாகப் பங்கேற்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அறிக்கையாக தயாா் செய்யப்பட்டு, மத்திய சுகாதாரத் துறைச் செயலருக்கு அனுப்பப்பட வேண்டும். அவா், அதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பாவாா்.

அதன் பிறகு, அனைத்து மாநிலங்கள் தரப்பில் ஓா் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பொதுவான இறுதி வரைவு வழிகாட்டுதல் தயாரிக்கப்பட வேண்டும்.

இந்த இறுதி வரைவு வழிகாட்டுதல் மற்றும் பரிந்துரைகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின் போது நீதிமன்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் 3 வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும், என்று குறிப்பிட்டு விசாறணையை மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.