மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்! வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல் ஏற்பாடுகள் பற்றி...

News image

கொல்கத்தாவில்... - IANS

Updated On :22 ஏப்ரல் 2026, 8:33 am

மேற்குவங்கத்தில் நாளை(ஏப். 23) 152 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் 1,478 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.

இரண்டாம் கட்டமாக தோ்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் 1,448 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா தலைமையிலான என்டிஏ கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

முதல்கட்ட தேர்தலையொட்டி மேற்குவங்க மாநிலத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்படுகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Summary

West Bengal Phase 1 Elections: Preparations Intensify by election commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.