நாடு தழுவிய இணைய மோசடி வலையமைப்பில் ஈடுபட்டிருந்த 38 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெருகிவரும் இணைய மோசடி வழக்குகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கடந்த 15 நாள்களில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் காவல் கண்காணிப்பாளர் மணீஷ் குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
ஆபரேஷன் மியூல் ஹன்ட் நடவடிக்கையின் கீழ் கடந்த 15 நாள்களில் ரூ. 10 கோடி மதிப்பிலான இணைய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டுங்கர்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 38 குற்றவாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட இணைய மோசடி வழக்குகளில் இந்தக் குற்றவாளிகள் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
குற்றவாளிகளுக்கு எதிராக இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட மோசடித் தொகை ரூ. 10 கோடியைத் தாண்டியுள்ளதாகவும், விசாரணை அதிகப்படுத்தும்போது இந்தத்தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் எஸ்கார்ட் சேவை திட்டங்கள் வாயிலாகப் பாதிக்கப்பட்டவர்களை ஆசை காட்டி ஏமாற்றியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் செயல்பட்டு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்த நடவடிக்கையின்போது, குற்றவாளிகளிடமிருந்து 73 மொபைல் போன்கள், 136 சிம் கார்டுகள், ஒரு சொகுசு ஜீப் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இந்த மோசடி வலையமைப்பை விசாரிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார், பான், ஏடிஎம் விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களைத் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ அல்லது தொலைபேசி செயலிகள் வாயிலாகவோ யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மோசடியான சலுகைகளுக்குப் பலியாகாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Summary
Police have arrested 38 people involved in a nationwide cyber fraud network and unearthed online scams worth over Rs 10 crore under 'Operation Mule Hunt', an official said on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது

சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ. 71.1 லட்சம் மோசடி!

அமெரிக்காவில் விசா மோசடி! 11 இந்தியர்கள் கைது!
ரூ.15 கோடி இணைய மோசடி: 27 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



