ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உ.பி.யில் சமாஜவாதி, திமுகவுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் பேரணி!

உ.பி.யில் சமாஜவாதி, திமுகவுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் பேரணி...

News image

யோகி ஆதித்யநாத் - ANI

Updated On :21 ஏப்ரல் 2026, 5:35 am

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேரணியில் கலந்துகொண்டார்.

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மறுவரையறை மசோதாவையும் இணைத்து மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தோற்கடித்தனர்.

தொகுதி மறுவரையறை மூலம் உத்தரப் பிரதேசத்துக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற போதிலும் அம்மாநில எதிர்க்கட்சியான சமாஜவாதி, முஸ்லிம், ஓபிசி பெண்களுக்கு உள்ஒதுக்கீடு இல்லாததால் எதிர்த்து வாக்களித்தது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம், லக்னெளவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணியின்போது பேசிய யோகி ஆதித்யநாத், “பெண்கள் முன்னின்று நடத்தும் இந்த பேரணி, மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவுள்ள காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும், நாட்டின் சரிபாதி மக்களிடையே நிலவும் சீற்றத்தின் அடையாளமாகவும் இருக்கின்றது.

இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான சகோதரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகளின் சித்தாந்தமும் செயல்பாடுகளும் பெண்களுக்கு எதிரானவையாக உள்ளன. பெண்களுக்கு எதிரான தங்கள் நற்பெயரைச் திருத்திக்கொள்வதற்காகப் பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கிய வாய்ப்பை, அவர்கள் முறையற்ற வகையில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.” என்றார்.

Summary

Yogi Adityanath Rallies Against Samajwadi Party and DMK in UP!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.