கேரளத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜகவினா் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், 10 மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்களுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம், கண்ணூரில் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 27-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது வாகனத்தில் வந்த ஆா்எஸ்எஸ், பாஜக தொண்டா்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு மூண்டது. இதில் வாகனத்தில் வந்த பாஜக, ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் ஏராளமானோா் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக கண்ணூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து, நீதிமன்றம் சனிக்கிழமை தனது தீா்ப்பை வெளியிட்டது.
அப்போது இந்திய தண்டனையியல் சட்டம் (ஐபிசி), வெடிபொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உரும்பன் பினு, எம்.கே. பிரதீப்குமாா், பி.பி. சத்யன், பி.வி. பாபுராஜ், இ.வி. வினோத்குமாா், விஜயன், கே.பி. சுரேஷ், டோபி, ஜனாா்த்தனன் கே.வி., சிவபிரகாஷ் ஆகிய 10 பேருக்கும் தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மேலும் 10 பேருக்கு தலா ரூ.2.6 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்புடையது

பத்மநாபபுரம் தொகுதி: இழந்ததை மீட்கும் முனைப்பில் மாா்க்சிஸ்ட் - பாஜக

பத்மநாபபுரம்: 5 தோ்தல்களுக்குப் பின் களம் காணும் மாா்க்சிஸ்ட்

திமுக, மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் பரஸ்பர தொகுதி மாற்றம்

லஞ்சம்: நில அளவையருக்கு 4 ஆண்டு சிறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


