தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை ரூ.865 கோடி பணமாகவும் பொருள்களாகவும் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப். 23 ஆம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 என இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியான நிலையில், அன்று முதல் அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதன்படி, தனிநபர் ஒருவர் எந்தவித ஆவணங்களும் இன்றி ரூ. 50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதை உறுதி செய்வதற்காக, மேற்கு வங்கத்தில் 2,728 குழுக்கள் மற்றும் தமிழ்நாட்டில் 2,283 குழுக்கள் என இவ்விரு மாநிலங்களில் மட்டும் 5,011-க்கும் மேற்பட்ட பறக்கும் படைக் குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இத்துடன், பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்காக, 5,363-க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுக்களும் பணியில் உள்ளன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.17) வரை பணமாகவும், பொருள்களாகவும் மேற்கு வங்கத்தில் ரூ. 427 கோடி, தமிழகத்தில் ரூ. 438 கோடி என மொத்தம் ரூ. 865 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக, இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Summary
The Election Commission of India has announced that cash and valuables worth Rs 865 crore have so far been seized by election flying squads in Tamil Nadu and West Bengal alone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

5 மாநில தேர்தல்: பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் ரூ. 400 கோடியைத் தாண்டியது!

தொடங்கியது தேர்தல் திருவிழா !
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


