ஆந்திரப் பிரதேசத்தில் மந்திராலயத்துக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கர்நாடகம் - ஆந்திரப் பிரதேசம் எல்லைக்கு அருகே, கர்நூல் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் இன்று அதிகாலை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பெண்கள், 3 வயது குழந்தை அடங்குவர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Van Bound for Mantralayam Meets with Accident! 8 Devotees Killed!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காரைக்குடி: வேனிலிருந்து இறங்கி சைக்கிள் ஓட்டிய விஜய்!

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

திமுக மாநாட்டிற்குச் சென்ற வேன் விபத்து! 20 பேர் காயம்! | Thanjavur | DMK

திமுக மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



