மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
வருகிற ஏப். 16 முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. 2029-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்துவதற்குமான மசோதாவை கொண்டுவரும் பொருட்டு இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த மசோதாவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
லக்னெளவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களுக்குச் சமத்துவத்தையும் சுயமரியாதையையும் வழங்குவதோடு மட்டுமல்லாமல், 'இந்து சட்ட மசோதா'வின் வாயிலாக அவர்களுக்கு வலுவான சட்ட உரிமைகளையும் வழங்க டாக்டர் அம்பேத்கர் முயன்றார்.
அப்போதைய காங்கிரஸ் அரசு, குறுகிய சாதிய மனப்பான்மையால் அந்த மசோதாவை ஏற்க மறுத்தது. பின்னர், அதனைச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து நிறைவேற்றியது.
இதன் விளைவாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) இடஒதுக்கீடு வழங்கப்படாததற்கும் பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், மேம்பாட்டிற்காக எவ்வித உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.
அந்த வகையில் மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை எங்கள் கட்சி வரவேற்கிறது. இருப்பினும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையே எங்கள் கட்சி எப்போதும் ஆதரித்து வருகிறது. அதேவேளையில், 33 சதவீத இடஒதுக்கீட்டையும் எங்கள் கட்சி வரவேற்கிறது. இது ஒரு சிறிய எண்ணிக்கையாக இருக்கலாம். ஆயினும் இது ஒரு தொடக்கம், இதை நாங்கள் வரவேற்கிறோம். 50 இல்லாவிட்டாலும், 33 போதுமானது வரவேற்கத்தக்கது" என்று கூறினார்.
Summary
BSP Leader Mayawati backs Women's reservation bill
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு ரத்து முட்டுக்கட்டை அல்ல, பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: ஆந்திர முதல்வர்

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



