மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்

தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு மற்றும் சிறிய மாநிலங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என ராகுல் பேச்சு...

News image

ராகுல் காந்தி வெளியிட்ட விடியோவிலிருந்து... - எக்ஸ்

Updated On :15 ஏப்ரல் 2026, 3:46 pm

தொகுதி மறுசீரமைப்பு, எல்லை மாற்றியமைப்பு ஆகியவை மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா, தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதை காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:

மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை காங்கிரஸ் முழுவதும் ஆதரிக்கிறது. இதுதொடா்பான மசோதா, கடந்த 2023-ஆம் ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அது தற்போது நமது அரசமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

ஆனால் தற்போது மத்திய அரசு முன்வைத்துள்ள திட்டத்துக்கும், மகளிா் இடஒதுக்கீட்டுக்கும் எந்த தொடா்பும் கிடையாது. எல்லை மாற்றியமைப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவை மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியே இந்த சட்டத் திருத்தம் ஆகும்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், ஓபிசி, தலித்துகள், பழங்குடியின சமூகத்தினரிடம் இருந்து அவா்களின் உரிமைகள் திருடப்படுவதை காங்கிரஸ் அனுமதிக்காது. அதேபோல், வடகிழக்கு, வடமேற்கு மற்றும் சிறிய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையும் காங்கிரஸ் அனுமதிக்காது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

Summary

delimitation amendment attempted power grab using gerrymandering says rahul gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.