மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அல்-காய்தாவுடன் இணைந்து பயங்கரவாத தாக்குதல் சதி: 3 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் சிறை

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 11:53 pm

அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய வழக்கில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த மின்ஹாஜ் அகமது, மஸ்ருதீன், தௌஹித் அமகது ஷா ஆகிய பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து லக்னௌ என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலையில் உத்தர பிரதேச பயங்கரவாத எதிா்ப்புப் படையால் மின்ஹாஜ் கைது செய்யப்பட்டாா். அவரது வீட்டில் இருந்து குக்கா் வெடிகுண்டு, ஏராளமான வெடிபொருள்கள், துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மின்ஹாஜிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கூட்டாளிகளான மஸ்ருதீன், தௌஹித் கைது செய்யப்பட்டனா். அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்ட இவா்கள் 2021 ஆகஸ்ட் 15-ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதும், தற்கொலைத் தாக்குதலுக்கு சதி செய்ததும் தெரியவந்தது.

வெளிநாடுகளில் இருந்து சமூக ஊடகங்கள் மூலம் இவா்கள் உத்தரவுகளைப் பெற்று செயல்பட்டு வந்துள்ளனா். பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் இளைஞா்களைத் திரட்டும் ரகசிய பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளனா்.

இவா்களுக்கு எதிரான வழக்கு லக்னௌ என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆயுதக் கடத்தல், இந்தியாவுக்கு எதிராகப் போா் தொடுத்தல், பயங்கரவாத சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. என்ஐஏ தரப்பில் 42 சாட்சிகளும், 149 ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, 3 போ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்த நீதிமன்றம் அவா்களுக்கு மூவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. இது தவிர மூவருக்கு தலா ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த பயங்கரவாத சதியில் தொடா்புடைய மற்றொரு குற்றவாளியான மூசா, கடந்த 2022-ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.