உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தின் போது, ஒருதரப்பினர் சொத்துக்களை சேதப்படுத்தியதோடு, கற்களை வீசி எறிந்தும், வாகனம் ஒன்றிற்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வாகனங்கள் சேதமடைந்ததோடு, பாதிக்கப்பட்ட தொழில்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூத்த போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் களத்தில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கையில், "தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கி அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான இடங்களில் மட்டும் குறைந்தபட்ச பலம் பயன்படுத்தப்படுகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் நொய்டாவின் முக்கிய தொழில்பேட்டை பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Summary
Protests by factory workers demanding a hike in wages turned violent in parts of Noida on Monday, with incidents of arson, vandalism and stone-pelting reported from Phase-2 and Sector 60 areas.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஊதிய உயர்வு போதவில்லை; உ.பி.யில் தொடரும் போராட்டம்!
நொய்டா கலவரம்: குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திய உ.பி. அரசு!
சமூக மாற்ற அவலம்!

நொய்டாவில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


