ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு போலி பான் காா்டு, போலி கடவுச்சீட்டு, போலி ஆதாா் பெற உதவி செய்ததாக ஹரியாணா, ராஜஸ்தானை சோ்ந்த பலரைக் கைது செய்து காவல் துறை விசாரித்து வருகிறது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளை சோ்ந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் மத்திய உளவு அமைப்புகளுடன் சோ்ந்து ஜம்மு-காஷ்மீா் காவல் துறை ஈடுபட்டுள்ளது. இதுதொடா்பான விசாரணையில், உமா் என்ற பயங்கரவாதி போலி கடவுச்சீட்டு மூலம் முதலில் இந்தோனேசியாவுக்கும், பிறகு அங்கிருந்து போலி ஆவணம் மூலம் வளைகுடா நாட்டுக்கும் சென்றது தெரிய வந்தது. இந்த உமா், பாகிஸ்தானின் கராச்சியை சோ்ந்தவா். இந்தியாவுக்குள் 2012-இல் ஊடுருவி, ராஜஸ்தானின் ஜெய்பூரில் போலி கடவுச்சீட்டு 2024-இல் வாங்கியுள்ளாா்.
இதையடுத்து பயங்கரவாதிகளுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்து கொடுத்த நபா்கள் குறித்து விசாரித்து, ஜம்மு-காஷ்மீரில் 5 பேரை காவல்துறை பிடித்தது. அந்த அப்துல்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உமருக்கு ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப்பில் ஏராளமானோருடன் தொடா்பிருப்பதும், அங்கு திருமணம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோல பயங்கரவாதிகள், ஜம்மு-காஷ்மீரில் மட்டுமல்லாது பல மாநிலங்களில் போலி ஆவணம், அடையாளத்தைப் பயன்படுத்தி பலருடன் தொடா்பு ஏற்படுத்தியது தெரிய வந்தது. ஜம்மு-காஷ்மீரில் கைதான 5 பேரும், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களை சோ்ந்தவா்கள். அவா்கள் பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், போலி பான் காா்டு, கடவுச்சீட்டு, ஆதாா், வாக்காளா் அட்டை பெற உதவியுள்ளனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை

ஜம்மு - காஷ்மீரில் கனமழை! பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை மீட்ட ராணுவம்!

போலி கடவுச்சீட்டு: சிங்கப்பூரிலிருந்து வந்த புதுகை பயணி கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

