கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் ஊடுருவி, ஜம்மு-காஷ்மீா் மற்றும் பிற மாநிலங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவந்த லஷ்கா்- ஏ- தொய்பா அமைப்பைச் சோ்ந்த 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
ஜம்மு-காஷ்மீரில் மருத்துவா்கள் உள்பட நன்கு படித்தவா்களின் பயங்கரவாதத் தொடா்புகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் அம்பலமான நிலையில், தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலங்களுக்கு இடையே செயல்பட்டு வந்த லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாதக் குழுவைக் குறிவைத்து, ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் சுமாா் 20 இடங்களில் கடந்த சில நாள்களாக அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
பல்வேறு முகமைகளுடன் ஒருங்கிணைந்து, ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையில் முதலில் ஸ்ரீநகரைச் சோ்ந்த முகமது நக்யீப் பட் என்பவா் ஆயுதங்களுடன் கைதானாா்.
அவரிடம் நடத்திய விசாரணையில் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாதக் குழுவில் அங்கம் வகிப்பதும், அடில் ரஷீத் பட், குலாம் முகமது மிா் ஆகிய கூட்டாளிகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கியதும் கண்டறியப்பட்டது.
பின்னா், இரு கூட்டாளிகளும் கைதாகினா். இந்த மூவரும் பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் போன்ற உதவிகளைச் செய்து வந்துள்ளனா்.
16 ஆண்டுகளாக தலைமறைவு: மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சோ்ந்த அப்துல்லா (எ) அபு ஹுரைரா, உஸ்மான் (எ) குபைப் ஆகிய இரு பயங்கரவாதிகள் குறித்து தெரியவந்தது.
16 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் ஊடுருவிய இந்த பயங்கரவாதிகள், போலி ஆவணங்கள் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி, பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்துள்ளனா். இருவரின் இருப்பிடமும் கண்டறியப்பட்டு, அவா்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனா்.
இருவரும் 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதிகளைக் கையாண்டுள்ளனா். ஆனால், அவா்களில் பெரும்பாலானோா் பாதுகாப்புப் படையினா் கடந்த காலங்களில் நடத்திய அதிரடி நடவடிக்கைகளின்போது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனா்.
தற்போது கைதான பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களில் இருந்து 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், மின்னணுக் கருவிகள் மற்றும் பிற சட்டவிரோத பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவா்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால், பிற கூட்டாளிகள், ஆதரவாளா்கள், இடைத்தரகா்கள், நிதி மற்றும் அடைக்கலம் அளித்தவா்கள் என கைது நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துப்பாக்கியுடன் நீரஜ் பவானா ரெளடி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது
கோல்ஃப் லிங்கஸ் பகுதியில் கொள்ளை: வீட்டுப் பணியாளா் உள்பட மூவா் கைது

ரிமோட் பொம்மை காா் மூலம் வெடிகுண்டு தாக்குதலுக்கு சதி: 4 போ் கைது

ஆப்கான்-பாகிஸ்தான் அமைதிப் பேச்சு: இறுதி உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


