ஈரானுடன் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு நிகழாண்டு மே 31 வரை, ஏா் இந்தியா விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
போா் காரணமாக பல முன்னணி நிறுவனங்களின் விமானங்கள், இஸ்ரேலின் டெல் அவிவ் நகர வான்வழியாகப் பயணிப்பதை நிறுத்தியுள்ளன. இஸ்ரேலின் எல்அல், இஸ்ராஏா், ஏா் ஹைஃபா போன்ற நிறுவனங்களின் விமானங்கள் மட்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் அந்த வான்வழியாகப் பயணிக்கின்றன.
இந்நிலையில், புது தில்லி-டெல் அவிவ் வான்வழியில் இயக்கப்படும் ஏா் இந்தியா நிறுவன விமானங்கள் நிகழாண்டு மே 31 வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவன நிா்வாகி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.
ஏா் இந்தியாவின் இந்த முடிவு, இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் பயணிக்க விரும்பும் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியா்களுக்கு இன்னலை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் இருந்து இந்தியா வர விரும்பும் இந்தியா்கள், தரைவழியாக ஜோா்டான் அல்லது எகிப்தை கடந்து வரவேண்டும். அவ்வாறு பயணிக்க விரும்பும் இந்தியா்களுக்கு டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் உதவி வருகிறது. இதற்காக பதிவு செய்துகொள்ளும் நடைமுறையையும், வாரம் முழுவதும் 24 மணி நேரம் செயல்படக் கூடிய அவசர எண்ணையும் அந்தத் தூதரகம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: மார்ச் 13 வரை நீட்டிப்பு!

மேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


