மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மமதாவின் ஹெலிகாப்டர் அருகில் பறந்த மர்ம ட்ரோனால் பரபரப்பு!

மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அருகில் அடையாளம் தெரியாத மர்ம ட்ரோன் பறந்தது குறித்து...

News image

மமதா பானர்ஜி (கோப்புப் படம்) - PTI

Updated On :4 ஏப்ரல் 2026, 11:41 am

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அருகில் மர்ம ட்ரோன் ஒன்று பறந்ததால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.

இதனால், ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அம்மாநிலம் முழுவதும் பயணித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மால்டா நகரத்தில் சனிக்கிழமை (ஏப். 4) அன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மமதா மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்கப் புறப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் மமதா அவரது ஹெலிகாப்டரின் அருகில் வந்தபோது அப்பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம ட்ரோன் ஒன்று பறந்துள்ளது. இதையடுத்து, அந்த மர்ம ட்ரோன் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 26 அன்று முதல்வர் மமதா பயணித்த விமானம் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றால், கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

mysterious drone was spotted flying near Bengal CM Mamata Banerjee's helicopter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.