மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்தியாவின் ஊழல் மிகுந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா: ராகுல்!

அஸ்ஸாமில் நில ஏடிஎம்-ஐ உருவாக்கியுள்ளதைப் பற்றி ராகுல் பேச்சு...

News image

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி - DPS

Updated On :2 ஏப்ரல் 2026, 7:59 am

இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

போகாஜன் தொகுதிக்கான கட்சி வேட்பாளர் ரட்டன் எங்திக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

பிரபல பாடகர் ஜூபின் அஸ்ஸாம் மக்களுக்காக நின்றார் ஆனால் அவரது மரணத்திற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் அவரது மரணம் தொடர்பான விவகாரத்தில் அவருக்கு நீதி வழங்கும்.

இந்தியாவில் மிகவும் ஊழல் மிகுந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா என்றும் அவரது குடும்பமும் ஊழலில் முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

தற்போது அவர் தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தாலும், அதன் பிறகு அவர் முற்றிலும் அமைதியாகிவிடுவார். மூன்று பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு அஸ்ஸாமில் மொத்தம் 94,400 பிகாஸ் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலங்கள் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டவை.

நரேந்திர மோடி, அமித் ஷா, ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோர் அஸ்ஸாமில் நில ஏடிஎம்-ஐ உருவாக்கியுள்ளனர். அவர்கள் மக்களிடமிருந்து நிலத்தைப் பறித்து, அதைப் பெரிய தொழிலதிபர்களுக்கு வழங்குகிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் கார்க் குறித்துப் பேசிய ராகுல், அவர் மாநிலத்திற்காகவும், மக்களுக்காகவும் உறுதியாக நின்றார். அவர் தனி நபருக்காகவோ, குறிப்பிட்ட சமூகத்திற்காகவோ, மொழிக்காகவோ அல்லது குறிப்பிட்ட வரலாற்றிற்காகவோ மட்டும் நிற்கவில்லை. அவர் அஸ்ஸாமின் பன்முக கலாசார மற்றும் பல மத மரபுகளின் உணர்வைப் பிரதிபலித்தார்.

காங்கிரஸ் கட்சி அதிகாரப் பரவலாக்கத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது. அதேவேளையில் பாஜக அஸ்ஸாம் மாநிலத்தைத் தில்லியிலிருந்து ஆட்சி செய்ய முயச்சிக்கிறது. அரசியலமைப்பின் 244(ஏ) பிரிவை முழுமையாகச் செயல்படுத்த நாங்கள் உறுதியளிக்கிறோம்.

கார்பி ஆங்லாங் மற்றும் ஆறாவது அட்டவணையின் கீழ் வரும் அனைத்துப் பகுதிகளும், குவாஹாட்டி அல்லது தில்லியால் அல்லாமல், அப்பகுதி மக்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் என அவர் கூறினார்.

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிய ராகுல், அமெரிக்கப் பொருள்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டு, இந்தியச் சந்தை அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதால், இந்த ஒப்பந்தம் புதுதில்லிக்குப் பெரும் இழப்பாகவே அமையும்.

எப்ஸ்டீன் ஆவணங்கள் காரணமாக, டொனால்ட் டிரம்ப் நரேந்திர மோடியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். டிரம்ப், அமெரிக்காவில் அதானிக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகளைத் தொடர்ந்தார் என அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசினார்.

Summary

Congress leader Rahul Gandhi has criticized Himanta Biswa Sarma, calling him India's most corrupt Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.