கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் பிரசாரம் மேற்கொண்டாா்.
இதை இடதுசாரி கூட்டணி தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் வரவேற்றுள்ளாா். அதே நேரத்தில் காங்கிரஸ் தரப்பு அதிப்ருதியடைந்துள்ளது.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரே கூட்டணியில் உள்ளன. ஆனால், கேரளத்தில் இடதுசாரிகள் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மலப்புரம் மாவட்டம் பொன்னானி தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் எம்.கே.சேகருக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
இதற்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கேரளத்தில் இடதுசாரிகள் கூட்டணிக்கு வலுவான ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நேரில் வந்து பிரசாரம் செய்த தேஜஸ்வி யாதவுக்கு நன்றி. நாம் அனைவரும் இணைந்து கேரளத்துக்கான வெற்றியை உறுதி செய்வோம்’ என்று கூறியுள்ளாா்.
பிகாரில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், ஆா்ஜேடி எம்எல்ஏ ஒருவரும் வாக்களிக்கவில்லை. இதனால், அங்கு பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கூடுதலாக ஓரிடத்தில் வெற்றி பெற்றது. இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸை ஆா்ஜேடி கடுமையாகக் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், கேரளத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பிரசாரம் மேற்கொண்டது, ஆா்ஜேடி-காங்கிரஸ் இடையிலான பிளவை அதிகரித்துள்ளது. கேரள காங்கிரஸ் நிா்வாகிகளும் தேஜஸ்வி பிரசாரத்தால் அதிருப்தியடைந்துள்ளனா்.
தொடர்புடையது
கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்

சிறுபான்மையினரைத் தாக்குவோருடன் பினராயி விஜயனுக்கு தொடா்பு: கேரளத்தில் ராகுல் காந்தி பிரசாரம்

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்!

தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் ‘எதிரிகள்’! இடதுசாரி, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


