தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவந்த காதல் தம்பதி, அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களது தற்கொலையின் பின்னணியில் செய்யறிவு காரணமாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
அண்மையில், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்த இந்த, பானு சந்தர் ரெட்டி (32) - பீபி ஷாஸியா சிரஜ் (31) இருவரும்தான் தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கோத்தனூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். பானு சந்தர், செவ்வாய்க்கிழமை காலை தன்னுடைய படுக்கை அறையில் தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த மனைவி பீபி, 18வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை தெரிவித்திருப்பதாவது, இரபுப் பணி முடிந்து பீபி காலை 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு திறக்கப்படவில்லை. காவலாளியைக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பானு சந்தர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. அவரது தற்கொலைக் கடிதமும் கிடைத்துள்ளது.
திடீரென அங்கிருந்து வெளியேறிய பீபி, 18வது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பானு சந்தர் எழுதியிருக்கும் தற்கொலைக் கடிதத்தில், ஆண்டுக்கு ரூ.80 லட்சம் சம்பளத்தில் பானு சந்தர் அமெரிக்காவில் பணியாற்றியிருக்கிறார். அங்கு அவர் ஒரு வீடும் கட்டியிருக்கிறார். தெலங்கானாவிலும் அவரது குடும்பம் வாழ வீடு கட்டியிருக்கிறார்.
திடீரென செய்யறிவு காரணமாக, அவர் வேலையை இழந்துள்ளார். வேறு வேலை கிடைக்காததால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரது குடும்பத்தினரும் மனைவியும் ஆறுதலாக இருந்தாலும் அவரால் வேலை இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
பீபிக்கு பெங்களூரில் வேலை கிடைத்து அவர்கள் இங்கே வந்துள்ளனர். ஆனால், பீபி, தன்னுடைய திருமணம் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், மன உளைச்சலில் இருந்தவந்த பானு சந்தர் தற்கொலை செய்து கொண்டதும், அதனால் அதிர்ச்சியடைந்த பீபியும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

படிப்பு மட்டும் போதுமா? செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

தம்பதி தற்கொலை

நிலத்தை விற்ற பெற்றோருடன் மகன் தகராறு: மூத்த தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



