தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

News image
Updated On :3 செப்டம்பர் 2025, 11:29 pm

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் சந்திப்புக்குப் பிறகு இந்தக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஜோஹான் வடேஃபுலை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இரு நாடுகளிடையேயான ராஜீய உறவு 25-ஆவது ஆண்டை எட்டியுள்ளது.

துடிப்பான ஜனநாயக நாடுகளாக மட்டுமின்றி முன்னணி பொருளாதார நாடுகளாகவும் திகழும் இந்தியாவும் ஜொ்மனியும் வா்த்தகம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தி என பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன.

பன்முக உலகம், அமைதி மற்றும் ஐ.நா. சீா்திருத்தங்களுக்கான தொலைநோக்குப் பாா்வையை நாங்கள் பகிா்ந்துகொள்கிறோம். ஜொ்மன் பிரதமா் இந்திய வர அழைப்பு விடுக்கிறேன் என்று குறிப்பிட்டாா்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு ஜோஹான் வடேஃபுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உக்ரைனில் போா் நிறுத்தத்துக்கு இந்தியா விடுத்த அழைப்பை ஜொ்மனி பாராட்டுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.