டிஜிட்டல் அரெஸ்ட்: வாழ்நாள் சேமிப்பான ரூ. 1.2 கோடி இழந்த முதியவர் உயிரிழப்பு!
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் வாழ்நாள் சேமிப்பான ரூ. 1.2 கோடி இழந்த முதியவர்...
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் வாழ்நாள் சேமிப்பான ரூ. 1.2 கோடி இழந்த முதியவர்...
By இணையதளச் செய்திப் பிரிவு
Muthumari.M
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.1.19 கோடி பணத்தை, சைபர் மோசடியில் இழந்துள்ளார்.
சில நாள்களுக்கு பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நடந்தது என்ன?
மும்பை சைபர் காவல்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்த மோசடி கும்பல், ஒரு தனியார் விமான நிறுவனத்தின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கை விசாரித்து வருவதாகவும் அதற்கு முதியவரின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
பின்னர் முதியவரை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்வதாகக் கூறி இந்த மோசடி வழக்கில் இருந்து விடுபட வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முதியவரும் அவரது மனைவியும் சில நாள்கள் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். பின்னர் மோசடி கும்பல் கூறியதை நம்பி தனது வங்கி கணக்கில் இருந்த ரூ. 1.2 கோடியை மோசடி கும்பல் கூறிய 5 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார் அந்த முதியவர்.
பின்னர், அவர்களிடம் இருந்து எந்த அழைப்பும் வராத நிலையில் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த அக். 22 ஆம் தேதி முதியவர் மயக்கம்போட்டு விழுந்தார். பின்னர் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Retired Officer Dies of Shock After Losing Rs 1.2 Crore in Scam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது