குளிர்கால கூட்டத்தொடரில் எஸ்ஐஆர் பற்றிய விவாதம் தேவை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
குளிர்கால கூட்டத்தொடரில் எஸ்ஐஆர் பற்றிய விவாதம் தேவை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
குளிர்கால கூட்டத்தொடரில் எஸ்ஐஆர் பற்றிய விவாதம் தேவை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
By இணையதளச் செய்திப் பிரிவு
Sundar S A
புது தில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எஸ்ஐஆர் பற்றி விவாதம் தேவை என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச. 1 தொடங்கி டிச. 19 வரை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசு தரப்பிலிருந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ. பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரன் ரிஜிஜு மற்றும் மத்திய இணையமைச்சர்கள் எல். முருகன், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். 36 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 50 தலைவர்கள் பங்கேற்றனர்.
அதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பற்றிய விவாதம் தேவை என்று அனைத்து எதிர்க்கட்சிளும் வலியுறுத்தின. மேலும், அண்மையில் தில்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பைச் சுட்டிக்காட்டி தேசிய பாதுகாப்பு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுவது உள்ளிட்ட விவகாரங்களும் எதிர்க்கட்சிகளால் விவாதத்துக்கு அரசிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், எதிர்கக்ட்சிகள் குறிப்பிட்ட விவகாரங்கள் பற்றி விவாதம் குளிர்கால கூட்டத்தொடரின்போது நடத்தப்படுமா என்பதற்கு அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இதனிடையே, பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “குளிர்காலகூட்டத்தொடர் முடக்கமின்றி நடைபெற வேண்டுமென்பதே எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார்.
Winter Session: Oppn united in demanding discussion on SIR; govt seeks cooperation .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது