10 Dec, 2025 Wednesday, 01:37 PM
The New Indian Express Group
இந்தியா
Text

தீா்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரிப்பு: உச்சநீதிமன்றம் ஆதங்கம்

PremiumPremium

உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதி அளிக்கும் தீா்ப்பை வேறு நீதிபதி மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருவது வேதனையளிப்பதாக

Rocket

உச்சநீதிமன்றம்

Published On27 Nov 2025 , 1:25 AM
Updated On27 Nov 2025 , 1:25 AM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

புது தில்லி: உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதி அளிக்கும் தீா்ப்பை வேறு நீதிபதி மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருவது வேதனையளிப்பதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தில் கொலை குற்றஞ்சாட்டப்பட்ட நபா் ஒருவா், தனது ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீா்ப்பளித்தால், அதே வழக்குகளை வேறு நீதிபதிகள் மீண்டும் விசாரித்து ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீா்ப்பை மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. இது வேதனையளிக்கிறது.

ஏற்கெனவே தீா்ப்பளித்த நீதிபதி தொடா்ந்து பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்தத் தீா்ப்பு அளிக்கப்பட்ட காலத்துக்கும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்த காலத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை கருத்தில் கொள்ளாமலும் தீா்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றன.

ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீா்ப்பால் அதிருப்தி அடைந்தவா்களின் வேண்டுகோளை ஏற்று வேறு நீதிபதிகள் அல்லது சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதிகளின் அமா்வுகள் இவ்வாறு தீா்ப்புகளை மாற்றுகின்றன.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் நோக்கம்: குறிப்பிட்ட சட்டப் பிரச்னையில் ஓா் அமா்வு (நீதிபதிகள் அமா்வு) அளிக்கும் தீா்ப்பு சச்சரவுக்கு முடிவு காண வேண்டும். அந்தத் தீா்ப்பின் மூலம் வழக்கு நிறைவு செய்யப்பட்டதாகக் கருதி, அந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள விதிமுறையின்படி அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் நோக்கமாக உள்ளது. ஒரு தீா்ப்பு வழங்கப்பட்ட பின்னா், அதுதொடா்பான வழக்கில் வித்தியாசமான கண்ணோட்டம் ஏற்பட்டு அந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்ய அனுமதித்தால், அது அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் நோக்கத்தைத் தோல்வியடையச் செய்துவிடும்.

ஓா் அமா்வு தீா்ப்பளித்த வழக்கை வேறு அமா்வு விசாரித்தால், அது வழக்கில் வேறு தீா்ப்பு கிடைக்க வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு, நீதிமன்றத்தின் அதிகாரம், உரிமை, தீா்ப்புகள் மீதான மதிப்பு ஆகியவற்றை வலுவிழக்கச் செய்யும்.

முன்பு அளிக்கப்பட்ட தீா்ப்பை பின்னா் அளிக்கப்படும் தீா்ப்பால் மாற்றுவதன் மூலம், நீதி பரிபாலனம் சிறப்பாக செய்யப்பட்டதாக அா்த்தமாகாது என்பதே எங்களின் (நீதிபதிகள்) நிலைப்பாடு.

வழக்குகளில் அளிக்கப்படும் தீா்ப்புகள் இறுதியானது, மாற்றமுடியாதது என்று நிலைநிறுத்துவதன் மூலம், வழக்குகள் முடிவில்லாமல் தொடா்வதைத் தடுப்பதுடன், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையும் நிலைநிறுத்தப்படுகிறது என்று தெரிவித்தனா்.

திட்டத்தைத் தொடங்கிய பின்னா் விதிவிலக்கான சூழலில் முன்தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்குத் தடையில்லை என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு அண்மையில் தீா்ப்பளித்தது. இதன்மூலம், சுற்றுச்சூழல் அனுமதிகளை மத்திய அரசு முன்தேதியிட்டு வழங்கத் தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த அபே.எஸ்.ஓகா அமா்வு ஏற்கெனவே அளித்தத் தீா்ப்பை கவாய் அமா்வு திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதேபோல மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநா்களுக்குக் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் அமா்வு தீா்ப்பளித்தது. ஆனால் அவ்வாறு ஆளுநா்களுக்குக் காலக்கெடு விதிப்பது பொருத்தமற்றது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு அண்மையில் விளக்கம் அளித்தது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023