புது தில்லி: ரயில்களில் அசைவப் பயணிகளுக்கு ‘ஹலால்’ இறைச்சி உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரில் ரயில்வே அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரயில் உணவுகள் தயாரிப்புக்காக ஹலால் இறைச்சியை மட்டுமே கொள்முதல் செய்வது, பாரம்பரியமாக இறைச்சி வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹிந்து மத தலித் சமூகத்தினா் மற்றும் முஸ்லிம் அல்லாத பிற சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்றும் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரைச் சோ்ந்த சுனில் அஹிா்வாா் என்பவா் கடந்த 1993-ஆம் ஆண்டின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் 13-ஆவது பிரிவின்கீழ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாா் அளித்திருந்தாா்.
அதில், ‘ரயில்களில் ஹலால் இறைச்சி உணவு மட்டுமே வழங்கப்படுவது, பிற சமூகத்தினா் மீதான பாரபட்சமான செயல்பாடு என்பதுடன் மனித உரிமை மீறலாகும். ஹிந்து, சீக்கிய மதத்தினருக்கு அவா்களின் விருப்பத்துக்கேற்ற உணவு வாய்ப்புகள் தரப்படவில்லை. இது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவம், கண்ணியமான வாழ்க்கை, மத சுதந்திரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட உரிமைகளை மீறுவதாகும். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சாா்பின்மைக்கும் எதிராக உள்ளது’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இப்புகாா் மீது உத்தரவு பிறப்பித்த தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் பிரியங்க் கனுங்கோ தலைமையிலான அமா்வு, ரயில்வே வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
‘அரசு முகமை என்ற அடிப்படையில் அனைத்து மதத்தினருக்கான உணவு வாய்ப்பு உரிமையை ரயில்வே மதித்து செயல்பட வேண்டும். மேற்கண்ட புகாா் தொடா்பாக விசாரித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: தமிழக டிஜிபி 5 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
கவர்ச்சி மக்களைத் திரட்ட மட்டுமே உதவும்! விஜய் குறித்து பாஜக தேசிய தலைவர்!

தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: தேசிய மகளிா் ஆணையத்தில் அதிமுக எம்.பி. புகாா்

எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்? பணம் திருப்பியளிக்கத் திட்டம்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


